நிறுவனம் அறிமுகம், ABOUT US.

 நிறுவனம் அறிமுகம், ABOUT US.


# தென்தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் பகுதியான நாகர்கோவிலில் 2000 ஆண்டு "சமூக மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு இயக்கம்" (SOCIAL ORGANISATION FOR LITERACY AWARENESS & RECONSTRUCTION - SOLAR)  எனும் பெயரில்  கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளை செய்யும் தன்னார்வ தொண்டு அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் முதல் இயக்குனராகவும், நிறுவனராகவும் திருமிகு ஏ பி அருள் குமரேசன் அவர்கள் செயல்பட்டார்.

DR A P ARUL KUMARESAN,DIRECTOR SOLAR IPMS.
DR A P ARUL KUMARESAN,DIRECTOR SOLAR IPMS.

# இந்த நிறுவனம் குமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து "அறிவொளி இயக்கம்" மூலம் பல எழுத்தறிவு குறித்த தன்னார்வ செயல்பாடுகளில் மக்களுடன் இணைந்து ஈடுபட்டது. குமரி மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாவதற்கு அரசுடன் இணைந்து கல்விப்பணி ஆற்றியது.

DR A P ARUL KUMARESAN,DIRECTOR SOLAR IPMS.

# 2002 - ல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு "அறிவியல் பரப்புவோம்" எனும் தலைப்பில் செயல் திட்ட பணிகளை திறம்பட செய்தது. மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சிகள், ஆய்வு கட்டுரைகள் தயாரித்தல், "துளிர் இல்லம்" செயல்பாடுகளையும், "குட்டி மருத்துவர்" என்னும் திட்டத்தையும் செயல்படுத்தியது.

Counselling,Psychotherapy & Handwriting Psychology [Graphology] Direct - Distance Open Learners Courses

# 2003 ஆம் ஆண்டு முதல் இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், மாற்று மருத்துவங்கள் குறித்த ஆய்வு பணிகளை "SOLAR ALTERNATIVE MEDICINE & RESEARCH CENTER " என்னும் பெயரில் மருத்துவப் பணிகளை செயல்படுத்த தொடங்கியது.

Counselling,Psychotherapy & Handwriting Psychology [Graphology] Direct - Distance Open Learners


# 2010 ஆம் சோலார் சேரிட்டபுள்  டிரஸ்ட் (SOLAR CHARITABLE TRUST)  எனும் பெயரில் தமிழக அரசின் டிரஸ்ட் சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்டு தனது சேவையை தொடங்கியது.

Counselling,Psychotherapy & Handwriting Psychology [Graphology] Direct - Distance Open Learners Courses


# 2012 ஆம் ஆண்டில் மதுரையில் செயல்பட்டு வந்த அகிம்சை அமைதிக்கான அனைத்துலக காந்திய நிறுவனம் (IGINP) நடத்திய பயிற்சிகளில் குமரி மாவட்டத்திலிருந்து பங்கேற்பாளர்களை தேர்வு செய்து மதுரை செசி (CESCI) யில் நடந்த பயிற்சிகளில் பங்கேற்க வைத்த பணியும், அதோடு 2018 ல் கோட்டாறு மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணி அமைப்பு ( COUNSELING MINISTRY) ஏற்பாடு செய்த இரண்டு நாள் ஆற்றுப்படுத்துதல் பயிற்சியில் பேராசிரியர் டாக்டர் ச. ஜெயப்பிரகாசம் [LATE]., டாக்டர் பா. ஆனந்தி ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவர்கள் மூலம் பயிற்சி நடத்தியது. வள்ளியம்மாள் நிறுவனம் (TVI)  நடத்தி  வருகிற "உதவும் (ஆற்றுப்படுத்தும்) கலை & அறிவியல்" சான்றிதழ் படிப்பிற்கு மாணவர்களை இணைக்கும் பணியையும் செய்தது.

SOLAR INSTITUE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE [SOLAR IPMS]

# 2014 ஆம் ஆண்டு முதல் ஆந்திரா மாநிலம் சித்தூரில் செயல்பட்டுவந்த INSTITUTE FOR BEHAVIORAL MANAGEMENT SCIENCES (IBMS) கல்வி நிறுவனத்துடன் இணைந்து "ஆற்றுப்படுத்துதல்", "உளநல சிகிச்சை" போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மையத்தை தொடங்கி மாணவர் சேர்க்கை மற்றும் வருடாந்திர வகுப்புகளை நாகர்கோவில் பகுதியில் நடத்தி வந்தது.IBMS இயக்குனர் காலம்சென்ற Prof V.V. PADMAKAR அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது தனி அக்கறை கொண்டு பல ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

SOLAR INSTITUE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE [SOLAR IPMS]

# 2014 ஆம் ஆண்டுமுதல் கோட்டாறு கத்தோலிக்க மறை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த போதை நோய் நலப்பணி (ADDICTION TREATMENT MINISTRY - ATM) அமைப்பின் இயக்குனராக பணியாற்றிய  அருள்பணி டாக்டர் J. பிரான்சிஸ் சேவியர் நெல்சன் அவர்களோடு இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ம் தேதியை "உலகப்போதை விழிப்புணர்வு தினமாக" சிறப்புடன் கொண்டாடி வருகிறது.

SOLAR INSTITUE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE [SOLAR IPMS]

# 2015 ஆம் ஆண்டுமுதல் ஆற்றுப்படுத்துதல் பணி இயக்குனரகதுடன் (COUNSELING MINISTRY - KDCM) இணைந்து அதன் இயக்குனர் டாக்டர் J. பிரான்சிஸ் சேவியர் நெல்சன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய ஆற்றுப்படுத்துதல் பயிற்சிகளில் அவர்களோடு  கீழ்கண்ட ஆறுமாத பயிற்சிகளை திறம்பட நடத்தியது.

* குடும்ப ஆற்றுப்படுத்துதல்

* மாணவரை ஆற்றுப்படுத்துதல்

* கல்வி / வேலை /  பணி ஆற்றுப்படுத்துதல்

* மனநல ஆற்றுப்படுத்துதல்

* மனித வளர்ச்சிப்பருவ ஆற்றுப்படுத்துதல்.

SOLAR INSTITUE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE [SOLAR IPMS]

# 2020 நவம்பர் 1ஆம் தேதி முதல் "SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE (SOLAR IPMS) எனும் பெயரில் குறுகியகால, நேரடி -  தொலைதூர கவுன்சிலிங் மற்றும் கையெழுத்து ஆய்வு உளவியல் படிப்புகளை தொடங்கியுள்ளது.இதில் 25 க்கும் மேற்பட்ட படிப்புகள் இடம் பெற்றுள்ளது.Ph.D ஆய்வு படிப்பும் (Honur) உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SOLAR INSTITUE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE [SOLAR IPMS]

# படிப்புகளுக்கு மத்திய அரசு அங்கீகார சான்று வழங்கப்பட்டு உள்ளது. இதன் நிர்வாகப் பொறுப்பை டாக்டர் ஏ பி அருள் குமரேசன் அவர்களும், இணையாக திருமதி வி.ஜெயந்தி அவர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். இதற்கான தனித்தனி முதன்மை பாடத்திட்டக் குழு,ஆலோசனை குழு, மருத்துவக் குழு, ஒருங்கிணைப்பாளர்கள் (PROGRAMME OFFICERS) மாநில ஒருங்கிணைப்பாளர்கள்(STATE EXECUTIVE)  என பல நிலைகளில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Counselling,Psychotherapy & Handwriting Psychology [Graphology] Direct - Distance Open Learners