உதவும் (ஆற்றுப்படுத்தும்) கலையின் வரைவிலக்கணம்

 


உதவும் வல்லுநரை நாடி உதவி கேட்பவர் வருகிறார். உதவி கேட்பவர் தனது பிரச்சினையைச் சரியாக இனங்கண்டு தீர்வு காண முடியாத குழப்ப நிலையில் உள்ளார். எனினும் பிரச்சினையிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். இன்னொரு வகையில் இதனைக் கூறுவது என்றால் உதவிகேட்பவர் தனது திறனற்ற நடத்தையால் இத்தகு நிலைக்குத் (தனது பிரச்சினையைச் சரியாக இனங்காண முடியாத, அதற்குத் தக்க தீர்வு காண முடியாத, நிலைக்கு) தள்ளப்பட்டுள்ளார். உதவும் வல்லுநர் தனது பரிவால் நிபுணத்துவத்தால் உதவி கேட்பவரிடம் உறவை உண்டாக்கி, உரையாடலை ஏற்படுத்தி உதவி கேட்பவரைத் தமது பிரச்சினையை இனங்கண்டு கொள்ளச் செய்து அதனது தீர்வுக்குரியச் சாத்தியமான மிகச் சிறந்த விடையையும் அவரையே காண வைக்கிறார்.


உதவி புரியும் படிமுறையின் உள்ளீட்டுக்கு செய்தி களுக்கு-உதவி கேட்டு வருபவரே பொறுப்பாவார். அவர் தான் செய்திகளை/ பிரச்சினைகளை முன் வைக்க வேண்டும். அவர் தனது பிரச்சினைகளை முன் வைக்காவிட்டால்-சிலவற்றை மறைத்தால் உதவிபுரியும் உறவு நின்றுவிடும்/குறைபாடுடையதாக ஆகிவிடும். உதவி கேட்பவரை உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் வல்லுநர் தூண்டிட வேண்டும்.